போதைப்பொருள்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு - போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
திருப்பத்தூர்: ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்கள் உபயோக்கிப்பதால் ஏற்படும் கண்பார்வை இழப்பு, நிரந்தர உடல் ஊனம், குடும்ப பாசம் மற்றும் மரணம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வா கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து துண்டு பிரச்சுரங்களை வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST