அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்வுக்கு எதிர்ப்பு; திமுகவினர் போராட்டம்! - அன்னவாசல் தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மாள் பதவி ஏற்றார். அப்போது திமுகவை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே, லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் சாலை பொன்னம்மாளை பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறவிடாமல், திமுகவினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST