தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மயிலாடுதுறை செம்பனார்கோயிலில் சிலம்பப் போட்டி - செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர்

By

Published : Apr 3, 2022, 8:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

மயிலாடுதுறை: செம்பனார்கோயிலில் செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மயிலாடுதுறையை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details