வீடியோ: கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் இருந்தவர்களை தூக்கி எறிந்த ஆடி கார்! - கார் விபத்து சிசிடிவி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் சௌபாஸ்னி ஹவுசிங் போர்டு காவல் நிலைய பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சாலையில், இதயத்தை உறையவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்த ஆடி கார், சாலையில் நடந்து சென்ற பலரை இடித்து சென்றது. இதையடுத்து சாலையோர குடிசை மற்றும் கடைகளுக்குள் கார் புகுந்தது. இந்த விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர். காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் சாரதி என்பவரை கைது செய்தனர்.