'வனத்தில் புலிகளும் வாழ வேண்டும்; அதேநேரத்தில் மனிதர்களும் வாழ வேண்டும் என்பதே சிபிஐ கொள்கை' - முத்தரசன் - இந்திய கம்யூ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் பழங்குடியினர் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முத்தரசன், "மக்களவையில் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது வனத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது கூடாது. இரவில் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் பயணிக்கக்கூடாது போன்றவை வன உரிமைச்சட்டத்துக்கு எதிரானது. வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் வனம் குறித்த மானியக்குழு கோரிக்கை விவாதத்தின்போது சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து திம்பம் மலைப்பாதையில் மீண்டும் வாகனப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து விவாதிக்க வேண்டும். வனத்தில் புலிகளும் வாழவேண்டும். அதேசமயம் மனிதர்களும் வாழவேண்டும் என்பதே சிபிஐ கொள்கை. மேற்குறிப்பிட்ட இக்கட்டான நிலை தொடருமானால் வரும் மே 9ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST