வாணியம்பாடி அருகே போலி நபர் வாக்களித்ததாகப் புகார் - வாணியம்பாடி அருகே போலிநபர் வாக்குப்பதிவு
திருப்பத்தூரின் உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள 7ஆவது வார்டைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அங்குள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினைப் பதிவுசெய்ய சென்றுள்ளார். அப்போது ஏற்கனவே அவரது வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், போலி நபர் வாக்களித்தது குறித்து மண்டலத் தேர்தல் நடத்தும் அலுவலரிடத்தில் புகாரளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST