சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய 'சிங்கம்' பட நடிகர்! - சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய நகைச்சுவை நடிகர் கிரேன் மனோகர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 6ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக கே.ஏ.ஏ. கந்தசாமி போட்டியிடுகிறார். கந்தசாமிக்கு அவருடன் படித்த கல்லூரி மாணவர்கள், பள்ளித் தோழர்கள், நட்பு வட்டாரங்கள் எனப் பலரும் வாக்குச் சேகரித்தனர். இந்த வரிசையில் சிங்கம், சிங்கம் 2, 3, சாமி 2, படைப்பாளி திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகரும், சமூக சேவகருமான கிரேன் மனோகர் சாந்தி நகர் பகுதியில் இன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இது குறித்து கிரேன் மனோகர் கூறுகையில், "ஏற்கனவே தேர்தலைச் சந்தித்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்த கந்தசாமி இந்த முறை நிச்சயம் வெற்றிபெறுவார். அவரும் வைரம், அவரது சின்னமும் வைரம். கந்தசாமி வெற்றிபெறுவார், நான் நன்றி தெரிவிக்க மீண்டும் வருவேன்" என்று பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST