பாம்பனில் குதூகலம்: குதித்து விளையாடும் டால்பின்கள்! - ramanthapuram
ராமநாதபுரத்தில் தற்போது கடல் காற்றின் வேகம் மாறி இருப்பதன் காரணமாக புதிய பாலம் கட்டும் பகுதியில் டால்பின்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. டால்பின்கள் கடலில் எகிறி குதித்து விளையாடும் காட்சிகள் அங்கு பணிபுரியும் பணியாளர்களைக் குதூகலப்படுத்தி உள்ளது. அதனை அவர்கள் தங்களுடைய கைப்பேசியில் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகப் பரவிவருகிறது.