பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி விநாயகர் சிலைகளை கரைத்த இளைஞர்கள் - விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
சேலத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து மூக்கனேரி மற்றும் குமரகிரி ஏரி பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் கொண்டு வந்த விநாயகர் சிலைகளை வாலிபர்கள் சிலர் பரிசல்களில் எடுத்துச் சென்று ஆழமான பகுதியில் கரைத்தனர் . சிலைகளை கரைக்கும்போது விநாயகருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் மற்றும் துண்டுகளை, ஏரியில் அப்படியே விட்டு விடாமல் இருக்க அந்த பொருட்கள் அனைத்தையும் மீண்டும் பரிசல்களில் எடுத்துவந்தனர். இந்தப் பொருட்கள் தவிர விநாயகர் சிலைகளுடன் போடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தட்டுகளும் ஏரியிலிருந்து கரைக்கு எடுத்து வந்து சுத்தப்படுத்தினர். இவர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை குவித்தனர்.