திமுக தொண்டரின் மண்டையில் உதித்த உதயசூரியன் - திருச்செங்கோடு தொகுதி திமுக தொண்டர்
திருச்செங்கோடு தொகுதியில் திமுக தொண்டர் கோபிநாத் என்பவர் தனது தலையில் அக்கட்சியின் சின்னத்தை வரைந்து நூதன முறையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவர் தன் தலையின் பின்பகுதியில் உதய சூரியன் போன்றும் வலது பக்கத்தில் DMK என ஆங்கிலத்தில் எழுதியும் இடது பக்கத்தில் திமுக கொடி போன்றும் முடி திருத்தம் செய்து வாக்கு சேகரித்து வருவது மற்ற கட்சியினரை வெகுவாக ஈர்த்துள்ளது.