நீரில் குதூகலமாக விளையாடும் மலைகிராம இளைஞர்கள் - ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்டம் மாக்கம்பாளையம், அருகியம், கோவிலுர் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் பல்வேறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மாக்கம்பாளையம் போலிபள்ளத்தில் கலந்து காட்டாறாக உருவெடுத்தது. செந்நிறத்தில் பாய்ந்தோடிய மழைநீரில் மாக்கம்பாளையம் கிராமமக்கள் குளித்து மகிழ்கின்றனர். பறைகளின் நடுவே இயற்கையோடு ரம்பியமாக காட்சியளிக்கும் பள்ளத்தில் தினந்தோறும் மலைக்கிராமமக்கள் நீரில் குளித்து குதூகலிக்கின்றனர். மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளநீரை தடுத்து சேமித்து வைத்தால், மாக்கம்பாளையம் பகுதியில் விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் கர்நாடகத்துக்கு வீணாக போகும் நீரை தடுக்க இயலும் எனவும் அக்கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.