"அடுத்த ஜென்மத்தில் முழுநேர ஓவியனாக பிறக்க வேண்டும் என்பதே ஆசை" - தழுதழுத்த நடிகர் சிவகுமார்! - Paintings by actor Sivakumar
சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஈரோட்டைச் சேர்ந்த மோன்ஸ் செல்வம்மினின் கின்னஸ் சாதனையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் தான் வரைந்த ஓவியங்களையும் அதைப் பற்றிய சுவையான நினைவுகளையும் அசைபோட்டார். மேலும் இந்நிகழ்வில் அடுத்த ஜென்மத்தில் ஒரு நடிகராக பிறக்காமல், ஒரு முழுநேர ஓவியனாக பிறக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் தெரிவித்தார்.