நெசவு நெய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் - ADMK candidate Jayaram from Singanallur constituency
கோவை: சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம், பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, நெசவு தொழில் செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து நெசவு நெய்தார். அதனை தொடர்ந்து ஒண்டிபுதூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரும் அவரது ஆதரவாளர்களும் தலைகவசம் அணியாமலும் முக கவசம் அணியாமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.