என்னைச் சந்திக்க வரவேண்டாம், அதுவே எனக்குப் பிறந்தநாள் பரிசு - சசிகலா - sasikala ask cadres not to come to wish on birthday
கரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவும், பொது முடக்கம் நீட்டிப்பு காரணமாகவும் தன்னை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் எனவும், மக்களுக்குச் சேவை செய்வதே எனக்கு நீங்கள் அளிக்கும் பிறந்தநாள் பரிசு எனவும் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள காணொலியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (ஆக. 17) சசிகலா தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், இந்தக் காணொலியை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.