விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர் காப்பீட்டு தொகை வழங்க நவாஸ் கனி வலியுறுத்தல்!
இராமநாதபுரம் மாவட்டத்தில் 2018-19ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை 117 கிராமங்களுக்கு முழுமையானதாக வழங்கப்படவில்லை. ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் பெருவிவசாயிகளின் ஆறு ஆயிரத்து 901 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி 100 சதவீத காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தினார்.