தீவிரமடையும் தொற்று: கோபுர தரிசனம்... கோடி புண்ணியம்! - கரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் 'பூலோக வைகுண்டம்' எனப் பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயம், பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலயம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள பக்தர்கள் ஏமாற்றத்துடன் மூடப்பட்டுள்ள ஆலயங்களில் வெளியில் நின்று கோபுரத்தைத் தரிசனம் செய்து செல்கின்றனர்.