சிஏஏவுக்கு எதிரான சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்: முள்வேலி அமைத்து போலீஸார் பாதுகாப்பு - சிஏஏவுக்கு எதிராக முற்றுகை போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், கோட்டை அருகே பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவைப் பகுதி நுழைவுவாயிலான போர் நினைவுச்சின்னம் பகுதியில் தடுப்புகள், முள்வேலி ஆகியவை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே ராஜாஜி சாலையில் அனுமதிக்கப்படுகின்றன.