விடுமுறை தினத்தை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - சுற்றுலாப் பயணிகள்
ஈரோடு: பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் விடுமுறையை செலவழித்தனர். பூங்கா நுழைவுக்கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விடுமுறை தினம் என்பதால் பல மாவட்டங்களில் இருந்தும் வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பூங்காவில் படகில் பயணம் செய்யதும், ரயில், கொலம்பஸ், பந்து விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் தங்களது நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தனர்.