நாமக்கல்லில் லாரி கூண்டு கட்டும் தொழில் அழியும் அபாயம் - நவம்பர் 1 புதிய வாகன சட்டம்
நாமக்கல்: திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லாரி கூண்டுக் கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் 12 ஆயிரம் சதுர அடிகள் நிலம் குத்தகை அடிப்படையில் வைத்திருக்க வேண்டும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்பயிற்சி (ஐடிஐ) கட்டாயம் படித்திருக்க வேண்டும், ஏஆர்ஏஐ (ARAI) தரச் சான்று பெற்றிருக்க வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை விதித்து மத்திய அரசு நவம்பர் ஒன்று முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை கொண்டுவரவுள்ளது. ஏற்கனவே டோல் கட்டணம், ஜிஎஸ்டி வரி உயர்வு போன்றவற்றால் வெளியூர் லாரிகள் வருவதில்லை, இப்புதிய சட்டத்தால் உள்ளூர் லாரி கூண்டு கட்டும் தொழிலை அழிந்து பெரு நிறுவனங்களுக்குத் துணைபுரிவது போல் உள்ளதாக லாரி கூண்டுக் கட்டும் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.