'மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தரவேண்டும்' - மாடுபிடி வீரர் கார்த்திக் கோரிக்கை! - தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
மதுரை - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கார்த்திக் தனது பேட்டியில், 'ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் மாடுபிடி வீரர்களுக்குத் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார். இரண்டாவது பரிசு பெற்ற ராம்குமார் கூறுகையில், 'ஊரடங்கு காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி’ என்றார்.