தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது - மதுரை ஆதீனம் - ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர தேசிய சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரி ஹர தேசிய சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மருது பாண்டியர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருதுபாண்டியர்கள் மதுரை ஆதீனம் திருஞானசம்பந்த பெருமானுக்கு வெள்ளித்தேர் செய்து கொடுத்தவர்கள். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மருதுபாண்டியர் நினைவு விழாவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.