பள்ளி திறந்ததும் மாணவர்கள் செய்த அட்டகாசம்: காணொலி வைரல் - படியில் தொங்கி பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த நின்னையூர் கிராமத்திலிருந்து தியாகதுருகம் பகுதிக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்பேருந்தில் ஏறிய சித்தலூர், புக்குளம் கிராமத்து அரசுப்பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்பக்கத்தில் தொங்கியவாறும், படியில் தொங்கியவாறும் பயணிக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.