காலம் கடந்து நிற்கும் சோழர்களின் கட்டிடக்கலை
அரியலூர்: ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டது தான் கங்கை கொண்ட சோழபுரமும் அங்குள்ள சிவாலயமும். அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. வருடந்தோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தையொட்டி 108 மூட்டை அரிசியில் சாதம் வடித்து அன்னாபிஷேகம் செய்வது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். காலம் கடந்து நிற்கும் சோழர்களின் கட்டிடக்கலையில் இக்கோயிலும் ஒன்றாகும்.