சாலையில் உருண்டபடி பரப்புரை மேற்கொண்ட சுயேச்சை வேட்பாளர்! - தேர்தல் வைரல் காணொலிகள்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பல வித்தியாசமான வியூகத் திட்டங்களை வேட்பாளர்கள் வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். துணி துவைப்பது, மாவு பிசைவது, தோசை சுடுவது, மருத்துவமனையை கையில் தூக்கி வருவது என பல பரிமாணங்களில் வேட்பாளர்கள் மக்கள் மனங்களைக் கவர் முனைப்பு காட்டுகின்றனர். அந்த வகையில், சாலையில் உருண்டபடி துண்டுப்பிரசுரங்களை சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மக்களிடம் கொடுத்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை, ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெருவை சேர்ந்த சுகந்தன்தான் இந்த புதிய ட்ரெண்டுக்கு சொந்தக்காரர். சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமியின் ஆதரவு பெற்றவர் என்று தன்னை முன்னிறுத்தி இவர் வாக்குகள் சேகரித்து வருகிறார்.