வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த வைகோ நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? துரை வைகோவுடன் நேர்காணல் - துரை வைகோவுடன் நேர்காணல்
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் தலைமை கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த வைகோ, தனது மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி இருப்பது அரசியல் நோக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அரசியல் வேண்டாம் என்பதில் கடைசிவரை வைகோவும் துரை வைகோவும் உறுதியாக இருந்த நிலையில், திடீரென ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அரசியல் பயணம் குறித்து நம்மிடம் மனம் திறக்கிறார் துரை வைகோ...