தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அதிமுக பரப்புரையில் குடிபோதையில் ஆடிய தொண்டர்! - ஈரோடு செய்திகள்

By

Published : Apr 3, 2021, 6:57 AM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் ஏ.பண்ணாரி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்குச் சேகரித்துவந்தனர். சிக்கரசம்பாளையத்தில் திறந்த ஜீப்பில் வேட்பாளர் பண்ணாரி வாக்குச் சேகரித்தார். அவரை வரவேற்பதற்கு 100-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். வேட்பாளர் வரும்வரை மத்தாளம் அடிக்கப்பட்டது. இந்த மாத்தாளத்துக்கேற்ப தாரைதப்பட்டை அடித்தபோது அங்கிருந்த அதிமுக தொண்டர் மதுபோதையில் நடனமாட ஆரம்பித்து குத்தாட்டம் போட்டார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் ரசித்தபடி அவரை உற்சாகப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details