'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டனர்' - ஸ்டாலின் கொதிப்பு! - law minister
சென்னை: "நீட் தொடர்பான தமிழ்நாட்டின் மசோதாவினை மத்திய அரசு நிராகரித்ததை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மறைத்து விட்டார். தவறான தகவலைக் கூறிய அவர் பதவி விலக வேண்டும்" என்று, திமுக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார். இதற்கு, "நான் பொய் சொன்னதை நிரூபித்தால் பதவி விலக தயார்" என்று சி.வி. சண்முகம் பதிலளித்தார்.