பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேரணி - பொள்ளாச்சி
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பாக டாக்டர் வரதராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.3) நடத்திய பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மற்ற கூட்டணிக் கட்சியினர் என அனைவரும் திமுக அலுவலகத்தில் இருந்து மகாலிங்கபுரம் ஆர்ச்சில் தொடங்கிய பேரணி கோயம்புத்தூர் ரோடு, புதுரோடு, பல்லடம் ரோடு வழியாக கட்சி அலுவலகம் வரை சென்றது.