ஆமை குஞ்சுகளுக்கு 'பாய்' சொன்ன கடலூர் ஆட்சியர் - Cuddalore District Collector Chandrasekara Saga
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடலூர் மாவட்ட கடற்கரையோரங்களில் ஆமை முட்டையிட்டுவருகின்றது. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகா ஆமை குஞ்சுகளை கடலுக்குள் விட்டார்.