தாகம் போக்க வந்து கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு - cheeta falling into a well near Bernampattu
வேலூர்: பேர்ணாம்பட்டு அருகே கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் சிறுத்தை ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அங்குள்ள தண்ணீர் தொட்டியைக் கண்டவுடன், தண்ணீர் குடிக்க முயன்ற சிறுத்தைத் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் அந்தச் சிறுத்தையைப் போராடி மீட்டு பத்திரமாக காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.