விளிம்புநிலை மனிதர்களுக்கு உணவளிக்கும் மாற்றுத்திறனாளி! - TANJORE
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சியில் வசித்துவரும் சாகுல் அமீது (70). இவர் ஒரு மாற்றுத் திறனாளி. தன்னுடைய சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்திவரும் இவர், ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவரும் மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவளித்து பெரும் சேவையாற்றிவருகிறார்.