பிபின் ராவத், 12 பேரின் உடல்களுடன் டெல்லி புறப்பட்ட ராணுவ விமானம்! - முப்படை தலைமை தளபதி பிபின் ராவன் மறைவு
சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. முன்னதாக, வெலிங்டனிலிருந்து சாலை வழியாக உடல்கள் அவசர ஊர்தியில் கொண்டுவரப்பட்டபோது, வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று மலர்த்தூவி வீரவணக்க முழக்கங்களை எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.