சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் - சமயபுரம் மாரியம்மன் கோயில் தேர்திருவிழா கொடியேற்றம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா இன்று (ஏப். 10) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நாளை முன்னிட்டு கோயிலின் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும், அஸ்திரதேவருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேளதாளங்கள் முழங்க சமயபுரம் அம்மன் திருஉருவம் தாங்கிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வருகிற 19ஆம்தேதி நடைபெறுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST