சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் எருது விடும் விழா - வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசு
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீரங்குப்பத்தில் 179ஆம் ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, எருது விடும் திருவிழா நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் வென்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ஆவது பரிசாக ரூ.70,000மும், 3ஆவது பரிசாக ரூ.50,000மும் வழங்கப்பட்டது. இவ்விழாவினைக் காணப் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST