ஒற்றை காட்டு யானையால் தூக்கமின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்.. - tribal people panic for wild elephants entering continuously
பொள்ளாச்சி : கேரளா தேக்கடி வனப்பகுதியிலிருந்து வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, பொள்ளாச்சி வனச்சரகம் சின்னார் பதி மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இரவு நேரங்களில் உலா வருகிறது. இதனால் அச்சமின்றி தவிக்கும் அப்பகுதி மக்கள், உயரமான இடங்களில் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உறங்காமல் உள்ளனர். வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வால்பாறை சாலையில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.