ஓடும் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு! - திருவாரூர் அண்மைச் செய்திகள்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார், விளக்குடி கடைத்தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பேருந்தை நிறுத்தி, அதில் அமர்ந்திருந்த பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.