பிறந்தநாளன்று பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பாலிவுட் நடிகை சோனல் சவுகான்! - அண்மை செய்திகள்
மும்பை: கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் அத்தியாவசியத் தேவையின்றி தவித்து வரும் பொதுமக்களுக்கு, அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கிவருகின்றனர். அந்த வரிசையில், பாலிவுட் நடிகையான சோனல் சவுகான் தனது 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மும்பையில் நேற்று (மே.22) ஏழை, எளிய மக்களுக்கு உணவு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.