காசிபூர் சாலையை சுத்தப்படுத்திய விவசாய சங்கத்தலைவர்! - சாலையை சுத்தப்படுத்திய ராகேஷ் திகாயத்
விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் காசிப்பூர் எல்லையில் தடுப்புகள் போடப்பட்ட பகுதியிலுள்ள சாலையை துடைத்து சுத்தம் செய்த பின்னர் 144 தடை உத்தரவு பலகையில் உள்ள தூசிகளை துடைத்தெறிந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகாயத், “அரசாங்கம் அவர்களுக்காக சாலைகளில் ஆணிகளை வைத்திருந்தாலும், விவசாயிகள் பூக்களை நடவு செய்வார்கள். விவசாயிகள் தங்கள் போராடும் இடத்தை அழுக்காக விடமாட்டார்கள், அதை பராமரித்து சுத்தம் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.