குன்னூரில் குப்பை மேலாண்மை பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி! - குன்னூர் குப்பை மேலாண்மை பூங்கா
நீலகிரி: குன்னூர் நகராட்சியிலுள்ள 30 வார்டுகளில் சேரும் குப்பை வசம்பள்ளம் அருகிலுள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டது. இங்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ‘கிளீன் குன்னூர்’ தன்னார்வ அமைப்பு மூலம் சீரமைக்கப்பட்டு குப்பை மேலாண்மை பூங்காவாக மாற்றப்பட்டது. இங்கு, மேரி கோல்டு ஃபேன்ஸி, ஆஸ்டர், பிளக்ஸ், கார்னேசன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.