ஸ்கேட்டிங்கில் வளைந்து சென்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி - வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி
தூத்துக்குடி: வாக்காளர் விழிப்புணர்வு, உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில், நேரு யுவகேந்திரா - சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் சார்பில், சிறுமி ரவீனா (7) ஸ்கேட்டிங் மூலம் 25 வளைவுகளில் 1கி.மீ மீட்டர் தூரம் வளைந்து சென்று சாதனை படைத்தார். கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா ஸ்கேட்டிங் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் சிறுமி ரவீனாவை பாராட்டி கௌரவித்தார்.