மாவட்ட ஆட்சியர் வாகனத்தை வழி மறித்த திமுகவினர் - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு: பரங்கிமலை ஒன்றியத்தின் 15 ஊராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை தாம்பரம் தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் மையம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் சின்னையா வீடு உள்ளது. அவரது வீட்டு வாசலில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்தனர். இதுகுறித்து திமுகவினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இருப்பினும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வாகனத்தை திமுகவினர் வழிமறித்து புகார் தெரிவித்தனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையம் அருகே சலசலப்பு ஏற்பட்டது.