மயங்கிய நல்லபாம்பு : பத்திரமாக மீட்பு! - coimbatore latest news
கடலூர் அடுத்த சுத்து குளம் பகுதியில் நீண்ட நேரம் மயங்கிய நிலையில் நல்ல பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த பாம்புபிடி வீரர் செல்லா, நீரில்லாமல் பாம்பு மயங்கியிருப்பதை அறிந்தார். கடும் தாகத்தில் இருந்த நல்ல பாம்புக்கு குடிக்க நீர் கொடுக்க, ஒரு பாட்டில் நீரையும் முழுவதும் குடித்து காலி செய்தது. பின்னர் பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு காப்புக் காட்டில் விடப்பட்டது.