தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு:வைரலாகும் வீடியோ! - கர்நாடக மாநில செய்திகள்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி என்னும் பகுதியில் நிலத்தடி நீர் தொட்டியில் குழந்தை எதிர்பாராதவிதமாக விழுந்தது. ஒன்றரை நிமிடங்கள் கழித்து தொட்டியில் இருந்த குழந்தையைக் கண்ட அவரது பெற்றோர், குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.