பெண்கள் பாதுகாப்பு, தற்காப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு, தற்காப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், பெண்கள் ஆபத்து, பிரச்னையில் மாட்டிக் கொள்ளும்போது எவ்வாறு தற்காத்து கொள்வது போன்றவை செயல்முறை மூலம் செய்து காட்டப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.