ஏற்காடு பூங்காவில் மலர்கள் அமைத்து கரோனா விழிப்புணர்வு! - அண்மை செய்திகள்
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், பரவலைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏற்காடு அண்ணா பூங்காவில், 10,000க்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளை வைத்து மலர், செடி தொட்டிகளைக் கொண்டு, ‘கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள், உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என ஆங்கிலத்தில் வாசகம் உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.