மூலிகை பொருட்கள், மூலிகை செடிகள் கண்காட்சி - sidha_day exhibition
நான்காவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அரசினர் சித்த மருத்துவமனையில் மூலிகை, மூலிகை பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. சித்த மருத்துவத்தின் பயன்களையும், பொருள்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முலிகை செடிகள், மூலிகை பொருள்களின் பெயர்கள் மாதிரிக்காக வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது. திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவர் அய்யாசாமி கலந்துகொண்டு சித்த மருத்துவத்தின் தற்போதைய தேவைகளையும், பயன்களையும் விளக்கிக் கூறினார்.