செக் பண்ணி பாத்தாச்சு... திமுகவினர் வழங்கும் கொலுசில் 16%தான் வெள்ளி - அண்ணாமலை பேச்சு - கோவை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பேச்சு
கோயம்புத்தூர்: துடியலூர் பகுதி வெள்ளகிணறில் 2ஆவது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வத்சலாவை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க பாஜக வெற்றிபெற வேண்டும். கரூர் மாவட்டத்திலிருந்து திமுக குழு ஒன்று கோவைக்கு வந்துள்ளது. அந்தக் குழு வாக்காளர்களுக்கு கொலுசு, டிபன் பாக்ஸ் வழங்கிவருகிறது. அவர்கள் கொடுத்த கொலுசை ஆய்வு செய்தபோது அதில் 16% தான் வெள்ளி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது எப்படி காதில் பூச்சுற்றினார்களோ அதேபோன்று தற்பொழுதும் செய்கிறார்கள். ஆகவே மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனப் பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST