காவல் துறைக்கு உதவியாக வீதிகளில் களப்பணியாற்றும் இளம் பெண்கள்! - வீதிகளில் இறங்கி களப்பணியாற்றும் பெண்கள்
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து பலர் வீடைந்திருக்க, வெளியேச் சுற்றித்திரிபவர்களை கண்டித்தும், அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்பவர்களுக்கு வழிகாட்டியும் என காவலர்துறையினரின் வேலை இரட்டிப்பாகிவிட்டது. மக்களுக்காகப் பணியாற்றும் காவலர்களின் வேலையைப் பகிர்ந்து கொண்டு, கண்காணிப்பு பணிகளில் அவர்களுக்கு உதவிட ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக களமிறங்கியிருக்கிறது இளம் பெண்கள் படை. இது குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்..