தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காவலர்களுடன் மல்லுக்கட்டிய மருத்துவமனை பெண் ஊழியர்: வைரல் வீடியோ! - national news in tamil

By

Published : Jun 7, 2021, 2:38 AM IST

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், கரோனா ஊரடங்கை மீறியதாக இருசக்கர வாகனத்தில் வந்த அப்பல்லோ மருத்துவமனையில் பெண் ஊழியரை காவல் துறையினர் தடுத்து, அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், “நான் மருத்துவமனையிலிருந்து பணி முடிந்து வருகிறேன், என்னிடம் எவ்வாறு நீங்கள் அபராதம் கோரமுடியும்" என்று காவலர்களுடன் வாக்குவாதத்தில் அந்தப் பெண் ஈடுபட்டுள்ளார். நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் முற்றவே, பெண்ணை கைது செய்ய காவலர்கள் முயன்றபோது, அவர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மருத்துவமனை ஊழியரும் மல்லுக்கட்டியுள்ளார். இந்தக் காணொலி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details