காரின் முன்பக்கத்தில் காவலர்; தூக்கி எறிந்துச் சென்றவர் கைது! - டெல்லி இராணுவ முகாம் (கேன்ட்) காவல் நிலையம்
டெல்லியில் கடந்த 12ஆம் தேதியன்று காரில் வந்த ஒருவர் போக்குவரத்தை மீறி சாலையில் சென்றுள்ளார். இதனைப் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் காரின் முன்நின்று தடுத்துள்ளார். அந்த ஓட்டுநர் காரை நிறுத்தாத காரணத்தால் காவலர் காரின் முன்பக்கம் படுத்துள்ளார். சிறிது தூரம் காரோடு காவலரை கொண்டுசென்ற ஓட்டுநர், பின் கீழே தள்ளிவிட்டிச் சென்றுள்ளார். இச்சம்பவம் டெல்லியின் தவுலா கான் பகுதியில் நடந்துள்ளது. பின்னர் அந்த கார் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார். மேலும் அவர்மீது டெல்லி இராணுவ முகாம் (கேன்ட்) காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.